Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“விக்ரம்” படத்தின் வெற்றி…. நன்றி கூறி லோகேஷ் கனகராஜ் ட்விட்…. பதிலளித்த கமல்ஹாசன்…!!!!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் போட்ட ட்விட்டர் பதிவிற்கு பதில் அளித்துள்ளார் கமல்ஹாசன்.

தமிழ் சினிமா உலகில் ஒரு சில திரைப்படங்களை மட்டுமே இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வருகின்றார் லோகேஷ் கனகராஜ். கைதி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான லோகேஷ் கனகராஜ் தற்போது கமலின் விக்ரம் திரைப்படத்தை இயக்கியுள்ளார். லோகேஷ் கனகராஜ் கமலின் தீவிர ரசிகர். இத்திரைப்படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கின்றார். இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கின்றது.

படத்தின் புரமோஷனுக்காக கமல் பெரிய அளவில் விளம்பரம் செய்தார். ஐஎம்டிபி இணையதளத்தில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களின் பட்டியலில் விக்ரம் திரைப்படம் முதல் இடத்தை பிடித்தது. இந்நிலையில் படம் சென்ற வெள்ளிக்கிழமை வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. இத்திரைப்படம் முழுக்க முழுக்க லோகேஷ் கனகராஜ் படமாக இருக்கின்றது. கதாபாத்திரங்கள் தேர்வு, ஸ்கிரீன்பிளே, ஆக்சன் காட்சிகள் என அனைத்திலும் லோகேஷ் கனகராஜ் ஆதிக்கம் இருக்கின்றது. இத்திரைப்படம் சர்வதேச தரத்தில் இருப்பதாக பாராட்டுகள் குவிந்து வருகின்றது. லோகேஷ் ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் செதுக்கியிருப்பதாக அவருக்கு பாசிட்டிவான கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றது.

இந்நிலையில் படத்தின் வெற்றி குறித்து லோகேஷ் கனகராஜ் இணையத்தில் மகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளதாவது, நான் இந்த அளவுக்கு உணர்ச்சி வசப்பட்டது இல்லை. எனக்கும் விக்ரம் படத்திற்காக நீங்கள் வழங்கிவரும் பேராதரவும் வியப்படையச் செய்கின்றது. இந்த அன்பை நான் எப்படி திருப்பி கொடுக்க போகிறேன் என தெரியவில்லை. கமல்ஹாசன் சாருக்கும் மக்களுக்கும் நன்றியுள்ளவனாக இருப்பேன். அனைவரையும் நேசிக்கிறேன் என பதிவிட்டு இருக்கிறார்.

இந்நிலையில் இதற்கு பதிலளித்து கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, அன்பான ரசிகர்களுக்கு நீங்கள் செய்யக்கூடிய ஒரே விஷயம் என்னவென்றால் ஒரு போதும் மன நிறைவை அடையாமல் இருப்பது தான்! நேர்மையாக உங்கள் வேலையை செய்யுங்கள். அப்படி செய்தால் மக்கள் அதை நேசிப்பார்கள், மதிப்பார்கள். என்னுடைய ஆற்றல் அவர்களின் அன்பினால் வருகின்றது. உங்களது அனைத்து முயற்சிகளுக்கும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் ஆதரவு எப்போதும் உண்டு என கூறியுள்ளார்.

Categories

Tech |