Categories
சினிமா தமிழ் சினிமா

‘விக்ரம்’ படத்தில் இணையும் ‘மாஸ்டர்’ பட நடிகர்… வெளியான சூப்பர் தகவல்…!!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள விக்ரம் படத்தில் மாஸ்டர் பட நடிகர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படத்தை இயக்கவுள்ளார். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் மலையாள நடிகர் பகத் பாசில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Confirmed: Master actor Arjun Das roped in for Vasanthabalan's next | Tamil  Movie News - Times of India

இந்நிலையில் விக்ரம் படத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி, மாஸ்டர் ஆகிய படங்களில் அர்ஜுன் தாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |