ஷிவானி நாராயணன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது ரசிகரின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
சின்னத்திரையில் பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா போன்ற சீரியல்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ஷிவானி நாராயணன். இதை தொடர்ந்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அதிக அளவில் பிரபலமடைந்தார். மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் ஷிவானி நடித்து வருவதாக தகவல் வெளியானது.
இவர் இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் ஷிவானியிடம் சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர் ஒருவர் ‘விக்ரம் படத்தில் நடிக்கிறீர்களா?’ என கேட்டுள்ளார். இதற்கு ஷிவானி விக்ரம் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் கேரவனில் தனது பெயர் இடம் பெற்றுள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதன்மூலம் அவர் விக்ரம் படத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஷிவானியின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.