Categories
சினிமா தமிழ் சினிமா

‘விக்ரம்’ படத்தில் பஹத் பாசிலுக்கு என்ன கதாபாத்திரம் தெரியுமா?… தீயாய் பரவும் தகவல்…!!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் விக்ரம் படத்தில் பஹத் பாசிலின் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தை இயக்குகிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் . இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

Fahadh plays a cop in `1 by Two`

மேலும் கமல்ஹாசன் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது . இந்நிலையில் விக்ரம் படத்தில் நடிகர் பஹத் பாசிலின் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி  பஹத் பாசில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |