Categories
சினிமா தமிழ் சினிமா

‘விக்ரம்’ படப்பிடிப்பில் இணைந்த பிரபல நடிகர்… தீயாய் பரவும் புகைப்படம்…!!!

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பில் நடிகர் பகத் பாசில் இணைந்துள்ளார்.

தமிழ் திரையுலகில் மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய வெற்றிப் படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் லோகேஷ் கனகராஜ். அடுத்ததாக இவர் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தை இயக்குகிறார். மேலும் இந்த படத்தில் பகத் பாசில், விஜய் சேதுபதி, நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

vikram movie update famous actor joined with kamalhaasan

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விக்ரம் படப்பிடிப்பில் நடிகர் பகத் பாசில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து பகத் பாசில் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |