விக்ரம் படத்தின் முதல்நாள் படப்பிடிப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் திரைப்படம் விக்ரம். இந்த படம் சென்னையில் நேற்று தொடங்கியது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பலரும் கமலுடன் நடிக்க உள்ளனர். நேற்றைய படப்பிடிப்பில் கமல் விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டது. முதல்நாள் படப்பிடிப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில் விக்ரம் படத்தின் முதல் நாள் ஏதோ பள்ளி நண்பர்களுடனான ஒன்றுகூடல் போல் இருந்தது. கடந்த 50 ஆண்டுகளில் இதுவரை இத்தனை காலம் படப்பிடிப்புக்கு இடைவெளி விட்டதில்லை. இந்த தருணத்தில் தோழர்கள் அனைவரையும் முழுவீச்சில் பணி செய்ய அழைக்கின்றேன். குறிப்பாக லோகேஷ் கனகராஜ் மற்றும் பல திறமையான சகோதரர்களான விஜய் சேதுபதி ஆகியோரிடமும் அழைப்பு விடுக்கிறேன் என்று அவர் தெரிவித்திருந்தார்.