விக்ரம் படப்பிடிப்பில் கமல்ஹாசனுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை நடிகர் நரேன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கி பிரபலமடைந்த லோகேஷ் கனகராஜ் தற்போது ‘விக்ரம்’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி, பஹத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி நாராயணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
A fan boy's dream come true moment,sharing screen space with the legend who inspired him to become an actor.Onboard #vikram @ikamalhaasan Thankyou dear @Dir_Lokesh and @RKFI . pic.twitter.com/YQLjzxqVFa
— Narain (@itsNarain) August 24, 2021
தற்போது காரைக்குடியில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று விக்ரம் படப்பிடிப்பில் நடிகர் நரேன் இணைந்துள்ளார். இதனை நரேன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கமல்ஹாசனுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது .