Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“விக்ரம் படப்பிடிப்பில் கமல் முழு சுதந்திரம் கொடுத்தார்”… பேட்டியில் பகிர்ந்த லோகேஷ் கனகராஜ்…!!!!

விக்ரம் திரைப்படத்தின் ஷூட்டிங்கின்போது கமல் முழு சுதந்திரம் வழங்கியதாக லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது கமல்ஹாசன் விக்ரம் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். சென்ற வருடம் படப்பிடிப்பு துவங்கிய நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் இத்திரைப்படம் படப்பிடிப்பு பற்றி லோகேஷ் கனகராஜ் பேசியது சமூக வளைதளத்தில் வைரலாகி வருகின்றது.

லோகேஷ் கனகராஜ் பேட்டி ஒன்றில் கூறியுள்ளதாவது, இப்போது யோசித்தால் கூட படத்தில் எந்தவிதமான குறுக்கீடும் கமல் சார் செய்ததாக ஞாபகம் இல்லை. ஆதலால் விக்ரம் படம் முழுக்க முழுக்க என்னுடைய பாணியில் தான் இருக்கும் என கூறியுள்ளார். விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, நரேன், அர்ஜுன் தாஸ், பகத் பாசில் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |