Categories
சினிமா

விக்ரம் பட வசூலை நெருங்கும் “காந்தாரா”…. வெளிவரும் தகவல்கள்…. வியப்பில் கன்னட திரையுலகினர்…..!!!!

கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டியின் இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாக வைத்து உருவாகிய படம் “காந்தாரா”. 1800களில் குறுநில ராஜா ஒருவர் பழங்குடிகளுக்கு வனப் பகுதியை ஒட்டிய நிலத்தை தானமாக வழங்குகிறார். ஆனால் அவரது சந்ததியினர் தங்களின் பூர்விக நிலத்தை பழங்குடியினரிடம் இருந்து பறிக்க முயற்சிக்கும் கதையே இந்த படம். தொன்மங்களையும், அதிரடியான சண்டைக் காட்சிகளையும் இணைத்து நல்ல திரைப்படமாக ரிஷப் ஷெட்டி மாற்றி இருக்கிறார். கன்னட வரவேற்பை அடுத்து தமிழ், ஹிந்தி, தெலுங்கு போன்ற மொழிகளிலும் இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.

ரூபாய்.16 கோடியில் தயாராகிய இந்த படம் கன்னடத்தில் மட்டும் ரூபாய்.200 கோடி வசூலைப் பெற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் காந்தாரா படத்தின் மற்ற மொழி உட்பட ஒட்டுமொத்த வசூல் ரூபாய்.300 கோடியை நெருங்கி வருவதாகவும், இன்னும் சில நாட்களில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி ரூபாய்.400 கோடி வசூலைப் பெற்ற விக்ரம் திரைப்படத்தின் வசூலை நெருங்கிவிடும் எனவும் சினிமா வட்டாரங்கள் கணித்துள்ளது. சற்றும் எதிர்பாராத வகையில் “காந்தாரா” இத்தனை பெரிய வெற்றியைப் பெற்றது கன்னட திரையுலகினர் மட்டுமின்றி இந்திய சினிமா வட்டாரத்திலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Categories

Tech |