Categories
சினிமா தமிழ் சினிமா

விக்ரம் பிரபுவின் ‘டாணாக்காரன்’… எதிர்பார்ப்பைக் கிளப்பும் டீசர்…!!!

விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள டாணாக்காரன் படத்தின் அதிரடியான டீசர் வெளியாகியுள்ளது ‌.

தமிழ் திரையுலகில் கடந்த 2012-ஆம் ஆண்டு பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கும்கி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் விக்ரம் பிரபு . இதை தொடர்ந்து இவர் இவன் வேற மாதிரி, இது என்ன மாயம், சிகரம் தொடு, சத்ரியன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருந்தார் . மேலும் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தற்போது இவர் இயக்குனர் தமிழ் எழுதி இயக்கியுள்ள டாணாக்காரன் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் அஞ்சலி நாயர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் எம்.எஸ்.பாஸ்கர், லால் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் டாணாக்காரன் படத்தின் அதிரடியான டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |