Categories
சினிமா

விக்ரம் பிரபுவின் “டாணாக்காரன்”…. வைரலாகும் ட்ரைலர்….!!

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் விக்ரம் பிரபு. இவர் புதிய வேடத்தில்  “டாணாக்காரன்” என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்தை வெற்றிமாறனின் உதவி இயக்குனர் தமிழ் என்பவர் இயக்கியிருக்கிறார். சுதந்திரப் போராட்டத்திற்கு முன்பாக போலீசாரை டாணாக்காரன் என்று அழைத்துள்ளார்கள்.

அதன் அடிப்படையில் இந்த படம் எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படும் நிலையில்  போஸ்டர்களில் அதே கெட்டப்பில் விக்ரம் பிரபு காட்சி அளித்துள்ளார். எனவே தமிழ் திரையுலகில் இதுவரை வெளிவராத கதையாக இது இருக்கும் என மக்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்தப் படத்தில் விக்ரம் பிரபுக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

 

Categories

Tech |