இயக்குனர் தமிழ் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியிருக்கும் படம் டாணாக்காரன். சூர்யாவின் ஜெய் பீம் படத்தில் வில்லனாக மிரட்டி இருந்த தமிழ் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி உள்ளார். நேற்று நள்ளிரவு 12 மணிக்கு டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது. 1997 ஆம் ஆண்டு போலீஸ் டிரெய்னிங்ன் போதும் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு படம் எடுக்கப்பட்டுள்ளது.
வெற்றிமாறனின் உதவியாளராக பணியாற்றிய காரணத்தினாலோ என்னவோ இடங்களில்தான் படத்தில் வெற்றிமாறன் டச் கொடுத்துள்ளார். போலீஸ் பயிற்சி அங்கு பாரேடு நடக்கும் நிகழ்வு பலவித பிரச்சினைகள், இடைஞ்சல்கள், போராட்டங்களை தாண்டி ஒரு இளைஞன் எப்படி போலீஸ் ஆகிறான் என்பதுதான் இந்த படத்தின் கதையாகும். போலீஸ் பயிற்சி மையத்தில் ஒரு டிம் தலைவராக ஈஸ்வரமூர்த்தி என்ற கேரக்டரில் போலீஸ் ஆகவே மாறியிருக்கிறார். மற்றொரு டீமுக்கு தலைவராக எம் எஸ் பாஸ்கரன் நடித்திருக்கிறார். போலீஸ் பயிற்சி மையத்தில் என்னவெல்லாம் நடக்கிறது, எப்படி எல்லாம் கடுமையாக பயிற்சி கொடுக்கப்படுகிறது என்பதை ஆழமாக சொல்லியிருக்கிறார்.
முதல் பாதியில் விறுவிறுப்பாக பலவற்றுடன் கதையை நகர்த்திய தமிழ் இரண்டாம் பாதியில் திரைக்கதை சுமாராகவே நகர்த்தி இருக்கிறார். விக்ரம் பிரபு தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார். நூத்தி ஐம்பது வருஷமா சட்டையை மாத்தாத டிபார்ட்மெண்ட்ல சட்டத்தை மாற்ற போறேன்னு வந்து நிக்கிற போன்ற பல வசனங்கள் படத்தின் வெற்றிக்கு வலு சேர்த்திருக்கிறது. காவலர் பயிற்சியில் நடக்கும் பல அவலங்களை காட்சிப்படுத்திய விதத்தில் தான் வெற்றியை எட்டியிருக்கிறது.