விக்ரம் வேதா திரைப்படத்தின் இந்தி ரீமேக்கில் ஹ்ரித்திக் ரோஷன் நடிக்க உள்ளார்.
புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரதா ஸ்ரீநாத், வரலட்சுமி மற்றும் பலர் நடித்த விக்ரம் வேதா திரைப்படம் 2017ல் ரிலீஸானது. இப்படத்தை புஷ்கர் காயத்ரி இந்தியில் ரீமேக் செய்ய உள்ளார். அப்படத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் அமீர்கானும், மாதவன் கதாபாத்திரத்தில் சயிப் அலிகானும் நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டது. தற்போது விஜய் சேதுபதியின் வேதா கதாபாத்திரத்தில் நடிக்க ஹ்ரித்திக் ரோஷன் ஒப்பந்தமாகியுள்ளார்.