விக்ரம் வேதா திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை விஜய் சேதுபதி மாற்றி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் விஜய்சேதுபதி தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து தற்பொழுது முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார். தன்னுடைய எளிமையான தோற்றம் எதார்த்தமான நடிப்பு என பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து மக்கள் செல்வனாக வலம் வருகிறார்.
மாஸ்டர் திரைப்படத்தில் தளபதி விஜயுடன் இவர் இணைந்து நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளார். இவருடைய அடுத்தடுத்த திரைப்படங்கள் கொரோனா காலம் முடிந்த பிறகு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவர் நடித்த விக்ரம் வேதா என்ற திரைப்படம் 2017 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றியடைந்தது. இத்திரைப்படத்தில் அமைய இருந்த சீரியஸான கிளைமாக்ஸ் காட்சியை விஜய்சேதுபதி தான் நகைச்சுவையாக மாற்றினார் என்று கூறப்படுகிறது.