புஷ்கர்- காயத்ரி இயக்கத்தில் விஜய்சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி, கதிர் உட்பட பலர் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் “விக்ரம் வேதா”. சஷிகாந்த் தயாரிப்பில் வெளியாகிய இந்தபடம் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தின் இந்தி ரீமேக்கில் மாதவன் கதாபாத்திரத்தில் சைப் அலிகான், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹிருத்திக்ரோஷன் இருவரும் நடித்து வருகின்றனர். தமிழில் விக்ரம் வேதா திரைப்படத்தை இயக்கிய புஷ்கர்-காயத்ரி இந்தியிலும் இயக்கி வருகின்றனர்.
ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் இந்த படத்தின் போஸ்டர்கள் அண்மையில் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது. இத்திரைப்படம் வரும் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக இருக்கிறது. விக்ரம் வேதா இந்திபடத்தின் டீசர் அண்மையில் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது. இந்த நிலையில் இப்படத்தின் டிரைலர் தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் விக்ரம் வேதா இந்தி படத்தின் டிரைலர் வரும் செப்டம்பர் 8-ஆம் தேதி வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
#VikramVedhaTrailer loading on 8th September 2022! #VikramVedha hitting cinemas worldwide on 30th September 2022.@iHrithik #SaifAliKhan pic.twitter.com/s58Atib1v5
— Pushkar&Gayatri (@PushkarGayatri) September 4, 2022