Categories
சினிமா

விக்ரம் 100-வது நாள்…. தம்பி லோகேஷுக்கு என் வாழ்த்து… நடிகர் கமல் வெளியிட்ட ஆடியோ….!!!!

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் திரைப்படங்களை இயக்கி தமிழ் திரையுலகில் தனக்கான இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்க விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், சூர்யா உட்பட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த”விக்ரம்” திரைப்படம் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் சமீபத்தில் வெளியாகி ரூபாய்.400 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்தது. இத்திரைப்படம் ஓடிடி-யில் வெளியாகி சாதனை படைத்து இருந்தாலும் தற்போதுவரை சில திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் விக்ரம் படம் 100-வது நாளை எட்டி இருக்கிறது. இதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதுகுறித்து கமல்ஹாசன் தன் சமூகவலைதளப் பக்கத்தில் ஆடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அவற்றில் “ரசிகர்களின் ஆதரவோடு இந்த படம் 100-வது நாளை எட்டியுள்ளதால் மகிழ்ச்சியோடு இருக்கிறேன். தலைமுறைகளை தாண்டி என்னை ரசிக்கக்கூடிய உங்கள் ஒவ்வொருவரையும் மானசீகமாக தழுவிக்கொள்கிறேன். விக்ரம் வெற்றிக்கு காரணமாகயிருந்த அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள். தம்பி லோகேஷுக்கு என் அன்பும் வாழ்த்தும்” என நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

 

Categories

Tech |