Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“விக்ராந்த் போர்க்கப்பலை சென்னையில் நிறுத்த திட்டம்” கடற்படை அதிகாரிகளின் அறிவிப்பு…!!

விக்ராந்த் போர்க்கப்பலை காட்டுப்பள்ளி துறைமுகத்தில் நிறுத்த தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் தீவிரமாக செய்து வருகின்றனர்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் உள்நாட்டு தொழில்நுட்பத்திலேயே கட்டப்பட்ட ஐ.என்.எஸ் விக்ராந்த் விமானம் தாங்கிய போர்க்கப்பலை கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் நாட்டுக்காக அர்ப்பணித்து வைத்துள்ளார். இந்த கப்பல் 262 மீட்டர் நீளம், 62 மீட்டர் அகலத்தில் கடலில் செல்லும் போது மிதக்கும் தீவு போல காட்சி அளிக்கும். இந்த போர்க்கப்பலை விசாகப்பட்டினம் துறைமுகத்தில் நிறுத்துவதற்கு போதுமான கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் சென்னையை அடுத்த காட்டுப்பள்ளியில் இருக்கும் எல் அண்ட் டி கப்பல் கட்டும் தளத்தில் நிறுத்துவது தொடர்பாக கடற்படை அதிகாரிகள் கடந்த சில ஆண்டுகளாகவே பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

கடந்த 2020-ஆம் ஆண்டு தற்காலிகமாக காட்டுப்பள்ளி துறைமுகத்தில் போர்க்கப்பலை நிறுத்துவதற்கு தேர்வு செய்யப்பட்டதாக கடற்படை அதிகாரிகள் பாதுகாப்பு குழுவிடம் தெரிவித்துள்ளனர். இதற்காக காட்டுப்பள்ளி துறைமுகத்தில் கூடுதல் கட்டுமான வசதிகள் ஏற்படுத்தப்பட இருக்கிறது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது, காட்டுப்பள்ளி துறைமுகத்தில் போர்க்கப்பலை நிறுத்துவதற்கு ஏற்பாடுகள் தொடங்கப்பட உள்ளது. இந்த பணிகள் முடிந்தவுடன் கொச்சியிலிருந்து கப்பல் காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டு சுமார் 8 ஆண்டுகள் வரையிலும் நிறுத்த வாய்ப்பு இருக்கிறது என தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |