விவசாயிகள் பிரதமரின் கிசான் சம்மன் திட்டத்தில் இணைந்து பயன் பெறுமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
மத்திய அரசு விவசாயிகளுக்காக பல திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் பிரதமரின் கிசான் சம்மன் நிதி திட்டமம் ஒன்று ஆகும். இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மத்திய அரசு வருடந்தோறும் 60,00 ரூபாய் வழங்கி வருகிறது. இந்த பணம் ஒரே நேரத்தில் அல்லாமல் மூன்று தவணைகளாக பிரிக்கப்பட்டு விவசாயிகளின் வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது.
பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் 2000 ரூபாய் இப்போது விவசாயிகளின் கணக்குகளுக்கு வரவு வைக்கப்படும். ஏற்கனவே 6 தவணை பணம் விவசாயிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இப்போது 7 வது தவணையாக வைக்கப்பட உள்ளது. இந்த ஏழாவது தவணை மத்திய அரசு டிசம்பர் 1ம் தேதி முதல் வங்கி கணக்கில் டெபாசிட் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இதில் இதுவரையில் 9.5 9 கோடி விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.
அதேபோல இத்திட்டத்தில் இணைந்து பயன்பெற தகுதியுள்ள விவசாயிகள் இன்னும் 5 கோடி பேர் விண்ணப்பிக்காமல் இருப்பதாகவும் அவர்கள் விரைவில் இணைந்து இந்த திட்டத்தில் பயன்பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் உங்களுக்கு பணம் கிடைக்கவில்லை என்றால் 011-24300606 என்ற இலவச நம்பருக்கு அழைத்து இது தொடர்பாக கேட்கலாம். மேலும் புதிதாக இந்தத் திட்டத்தில் சேர விரும்பும் விவசாயிகள் pmkisan.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம்.