விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேயை விசாரணைக்காக அமெரிக்காவிற்கு நாடுகடத்தபிரிட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
விக்கிலீக்ஸ் இணையதளத்தின் மூலமாக 2010-ஆம் ஆண்டு ஈராக், அமெரிக்க போர்கள் பற்றி அமெரிக்க ராணுவ ரகசியங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜூலியன் அசாஞ்சே. இவர் 2012 ஆம் ஆண்டு ஈக்வடார் தூதரகத்தில் அடைக்கலம் புகுந்துள்ளார். அதன்பின் தொடர்ந்து ரகசியங்களை வெளியிட்டு இருப்பதால் அடைக்கலம் தர ஈக்வடார் தூதரகம் மறுத்துள்ளது.
இந்த நிலையில் 2019ஆம் ஆண்டு அவரை மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்துள்ள நிலையில் அமெரிக்காவிற்கு நாடுகடத்த பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. மேலும் அவரை நாடு கடத்துவது பற்றி இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் பிரிட்டன் உள்துறை அமைச்சர் பிரீத்தி பட்டேலிடம் இருக்கிறது. இந்நிலையில் அசாஞ்சே தனது பக்க நியாயங்களை மே 18 வரை முன்வைக்க வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.