Categories
சென்னை மாவட்ட செய்திகள்

விசாரணைக்கு அழைத்து சென்ற இடத்தில்…. திடீரென இறந்த வாலிபர்…. பரபரப்பு சம்பவம்…!!

விசாரணைக்கு அழைத்து சென்ற வாலிபர் திடீரென இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள கெல்லீஸ் சிக்னல் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த ஆட்டோவை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது ஆட்டோவில் இருந்த இரண்டு பயணிகளிடம் 500 கிராம் கஞ்சா மற்றும் ஒரு அரிவாள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் இரண்டு பேரையும் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் ஒருவர் திருவல்லிக்கேணியை சேர்ந்த ரமேஷ் என்பதும், மற்றொருவர் விக்னேஷ் என்பதும் தெரியவந்துள்ளது. இவர்கள் இருவர் மீதும் காவல்நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் விசாரணைக்காக தலைமைச் செயலக காவல்நிலையத்தில் இருந்த விக்னேஷுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த மேற்கு மண்டல இணை கமிஷனர் பிரபாகரன், கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் கார்த்திகேயன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதனையடுத்து இறப்பு குறித்து விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதன்படி நீதிபதி முன்னிலையில்  விக்னேஷின் உடலை பிரேத பரிசோதனை செய்ய உள்ளனர்.

Categories

Tech |