திருப்பூரில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட மணிகண்டன் என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்ததால் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம் செட்டிபாளையம் ஜோதி நகரை சேர்ந்தவர் மணிகண்டன்.இவர் மீது ஊரக காவல் நிலையத்தில் ஒரு சில வழக்குகள் நிலுவையில் உள்ளது .அதனால் அவரை வீட்டிலிருந்து காலை 6 மணி அளவில் விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர்.அங்கு போலீசார் விசாரணை நடத்தி கொண்டிருந்த பொழுது மணிகண்டன் மயங்கி விழுந்ததாக போலீசார் கூறியுள்ளனர்.இதற்கிடையே உறவினர்களிடம் தகவல் தெரிவித்தனர்.இதனையடடு த்து சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றடைந்தனர. ஆனால் மணிகண்டனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியிருந்தார்கள். இதனை அடுத்து காவல் நிலையத்திலும், அரசு மருத்துவமனையிலும் மாவட்ட ஆட்சியர் வருகைக்கு முன்பாகவே அவர்களது உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதாவது விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட போது நல்ல நிலையில் இருந்த மணிகண்டன் காவல்துறையின் துன்புறுத்தலால்தான் மணிகண்டன் உயிரிழந்ததாக அவர்களது உறவினர்களின் குற்றச்சாட்டுனர். ஆதலால் தலைமை அரசு மருத்துவமனைக்கு வந்த மாவட்ட ஆட்சியர் வாகனத்தை முற்றுகையிட்டு அவர்களுடைய உறவினர்கள் கண்ணீர் விட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில் மணிகண்டன் உடலை உடற்கூறாய்வு செய்வதற்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.இதனையடுத்து போராடத்தை அவர்கள் வாப்பஸ் பெற்று உறவினர்கள் அனைவரும் கலைந்தனர்.