விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காவல்நிலையத்தில் விசாரணை கைதிகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் காவல்நிலையம் முழுவதிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள டவுன் போலீஸ் நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெவ்வேறு குற்றங்களை சார்ந்த இரு விசாரணை கைதிகளை போலீசார் அழைத்து வந்து மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் விசாரணை முடிந்தபின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அவர்கள் இருவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து அவர்கள் இருவருக்கும் நோய் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து இருவரையும் அரசு மருத்துவமனையில் கொரோனா கிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தலின்படி அருப்புக்கோட்டை காவல் நிலையம் முழுவதிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.