Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“விசாரணைக்கு வந்துடனும்” அழைத்த காவல்துறையினர்… பயத்தில் ஆட்டோ டிரைவர் எடுத்த விபரீத முடிவு…!!

செம்பட்டி அருகே காவல்துறையினர் விசாரணைக்கு பயந்து ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செம்பட்டி அருகே இருக்கின்ற ஜெ. புதுக்கோட்டை அம்பேத்கர் காலனியில் முருகன் என்பவர் வசித்துவருகிறார். அவருடைய மகன் கவியரசு (23) என்பவர் சின்னாளப்பட்டியில் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருக்கிறார். அவர் கடந்த 30ஆம் தேதியன்று திருமண வயது பூர்த்தி அடையாத ஒரு காதல் ஜோடியை தனது ஆட்டோவில் வாடகைக்கு கூட்டிச் சென்று, திண்டுக்கல் அருகே உள்ள ஒரு இடத்தில் இறக்கி விட்டுள்ளார். இந்நிலையில் அந்தப் பெண்ணின் பெற்றோர் சின்னாளப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் கடந்த 30-ஆம் தேதி கவியரசு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று காவல்துறையினர் விசாரித்துள்ளனர்.

அதன் பின்னர் கவியரசின் தாய் உமா காவல் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது அவரிடம் மறுநாள் காலை 10 மணிக்கு மீண்டும் கவியரசர் விசாரணைக்கு அழைத்து வருவேன் என காவல்துறையினர் எழுதி வாங்கியுள்ளனர். ஆனால் மறுநாள் கவியரசு காவல்துறையினருக்கு பயந்து விசாரணைக்கு செல்லவில்லை.இதனைத் தொடர்ந்து தன் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து விடுவார்கள் என்று பயந்து கவியரசு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அப்போது உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கவியரசு நேற்று உயிரிழந்தார்.

இதுபற்றி செம்பட்டி காவல் அதிகாரி ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார். இந்நிலையில் கவியரசுவின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவரின் உறவினர்கள் அனைவரும் உடலை வாங்குவதற்கு மறுப்பு கூறிவிட்டனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகின்றனர். இதுபற்றி கவியரசுவின் உறவினர்கள் கூறுகையில், சின்னாளப்பட்டி சேர்ந்த ஒருவர் காவல் துறையுடன் சேர்ந்து கவியரசு மற்றும் அவரது குடும்பத்தினரை மிரட்டி உள்ளனர்.அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்தால் மட்டுமே உடலை வாங்கிக் கொள்வோம் என்று கூறியுள்ளனர்.

Categories

Tech |