சீனாவின் விசாரணையில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று கன்னட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
சீனாவில் பிரபலமான ஹூவாய் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மெங் வாங்ஷூ. இவர் பணமோசடி செய்ததாக அமெரிக்கா அரசு கடந்த 2019ம் ஆண்டு இவரின் மீது குற்றம் சாட்டியுள்ளது. இதனால் கன்னட காவல்துறையினர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வான்கூவரில் வைத்து மெங் வாங்ஷூவை கைது செய்துள்ளனர். இக்காரணத்தால் கோபமடைந்த சீனா கன்னடாவை பழிவாங்குவதற்காக இரண்டு கன்னட அதிகாரிகளை தங்கள் நாட்டில் வேவு பார்த்ததாக குற்றம் சாட்டி கைது செய்துள்ளது. இதனையடுத்து சீனாவில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் கன்னட அதிகாரியான மைக்கேல் கோவிர்ச் என்பவரது விசாரணை நடைபெற்றுள்ளது.
இதனையடுத்து மற்றொரு நபரான மைக்கேல் ஸ்பாவர் என்பவரது விசாரணை தற்போது ரகசிய அறையில் வைத்து தொடங்கியுள்ளது. இந்த விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்த கன்னட பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ சீனாவின் விசாரணையில் வெளிப்படைத்தன்மை இல்லை, அவர்கள் செய்வதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளார். மேலும் சீன அரசு கைது செய்த கன்னட அதிகாரிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, பிரிட்டன் போன்ற 26 க்கும் மேற்பட்ட நாடுகள் கூறியுள்ளதாக கன்னடாவின் துணை தூதர் ஜிம் நிகெல் தகவல் தெரிவித்துள்ளார்.