அரசு விடுதியில் தங்கியிருந்த ஆதரவற்ற பெண்களை ஆடைகளை கழட்டி நடனமாட செய்து அதை வீடியோவாக எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கோன் மாவட்டத்தில் உள்ள மாநில அரசின் சார்பில் பெண்கள் தங்கும் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. அதில் ஒடுக்கப்பட்ட பெண்கள் ஆதரவற்ற பெண்கள் இந்த விடுதியில் தங்கி வருகின்றனர். இதனிடையே போலீசார், விடுதி ஊழியர்கள் சிலர் விடுதியில் உள்ள பெண்களை விசாரிக்க வேண்டும் என்று அத்துமீறி உள்ளே நுழைந்த அந்த பெண்களை சித்தரவதை செய்து ஆடைகளை கழட்டி நடனமாட சொல்லி அதை வீடியோவாக எடுத்து ஊடகங்களில் வெளியிட்டு உள்ளனர். இது குறித்து பாஜக தலைவர் சுதிர் முங்கந்திவர் இந்த விவகாரத்தில் தீவிரம் காட்டவில்லை என்று குற்றம் சாட்டு எழுந்துள்ள நிலையில் சட்டமன்றத்திலும் இந்த விவகாரம் வெடித்தது.
இதையடுத்து உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் இந்த சம்பவம் தொடர்பாக பேசிய போது இந்த நிகழ்வு மிகவும் கண்டிக்கத் தக்க ஒரு நிகழ்வு. நான்கு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு இரண்டு நாட்கள் விசாரணை நடத்தப்பட்டு அறிக்கை அளிக்கப்படும் என்று தெரிவித்தார். இதன் தொடர்பான அனைத்து தகவல்களும் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
மேலும் ஒரு பெண்ணை ஆடைகளைக் கழற்றி நடனமாட செய்து அதனை வீடியோவாக எடுப்பது ஒரு கேவலமான செயல். இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மட்டுமே எங்களின் எதிர்பார்ப்பு என்று கூறியுள்ளார்.