Categories
மாநில செய்திகள்

விசாரணை கைதி மர்ம மரணம்….. சிபிசிஐடி விசாரணைக்கு டிஜிபி உத்தரவு….!!!!

சென்னையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட விக்னேஷ் என்ற இளைஞன் உயிரிழந்த விவகாரம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த கட்டுமான தொழிலாளி சுரேஷ் அவரது நண்பர் விக்னேஷ் இருவரையும் கடந்த 18ஆம் தேதி புரசைவாக்கம் கெல்லீஸ் சிக்னல் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட விக்னேஷ்காவல்துறையினரால் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றபோது மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வாலிபர் சுரேஷ் காவல்துறையின் அத்துமீறிய நடவடிக்கை காரணமாக காவல் நிலையத்திலேயே இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

வாலிபர் சுரேஷ் மரணம் குறித்தும், உண்மை தன்மை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தது. இந்நிலையில் விக்னேஷ் என்ற இளைஞர் உயிரிழந்த விவகாரம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |