Categories
மாநில செய்திகள்

விசாரணை கைதி விக்னேஷ் மரணம்…. சட்டப்பேரவையில் அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம்..!!

சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் மரணம் தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

சென்னை புரசைவாக்கம் சிக்னலில் வாகனசோதனையின் போது கஞ்சா வைத்திருந்ததாக 26 வயதான விக்னேஷ் கடந்த வாரம் காவல்துறையினரால் கைது செய்யப்படுகிறார்.. கைது செய்யப்பட்ட விக்னேஷ் விசாரணையின்போது காவலர் தாக்கியதில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.. இந்நிலையில் இதுதொடர்பாக கவனயீர்ப்பு தீர்மானத்தை சட்ட பேரவையில் எதிர்க் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசியுள்ளார்..

அவர் பேசியதாவது, சிபிசிஐடி இடம் இந்த வழக்கு கொடுக்கப்பட்டுள்ளது இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும். மேலும் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர காவல்துறை முயற்சிப்பதாக புகார் எழுந்துள்ளது. விக்னேஷ் மீது குற்ற வழக்குகள் இருந்தால் அவரை உரிய முறையில் விசாரணை நடத்தியிருக்க வேண்டும்..

ஆனால் அவரை காவல்துறையினர் தாக்கியுள்ளனர். காவல்துறையினர் தாக்கியதை அடுத்து தான் மரணமடைந்துள்ளார்.. சிபிசிஐடி வசம் உள்ள இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், அப்போது தான் உரிய முறையில் விசாரணை நடக்கும் என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஓ பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டு, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த சூழலில் அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளது.

Categories

Tech |