பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி சென்ற ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமானது. முதல் நாளில் போட்டியாளர்களை கமல் அறிமுகப்படுத்தி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளே அனுப்பி வைத்தார். இந்த நிலையில் முதல் முறையாக ஹவுஸ் மேட்டுகளை அகம் டிவி வழியாக கமல் சந்திக்க இருக்கின்றார். முதல் நாள் நாமினேஷன் பிராசஸை வேற மாதிரியாக ஆரம்பித்தார் பிக்பாஸ்.
இதனால் போட்டியாளர்களும் வெறித்தனமாக விளையாடி வருகின்றார்கள். 40 நாட்களுக்குப் பின் நடக்க வேண்டிய சம்பவங்கள் எல்லாம் இப்போதே தொடங்கி விட்டது என கூறி இருக்கின்றார் கமல். மேலும் இந்த வாரம் கேட்பதற்கும் விசாரிப்பதற்கும் நிறைய இருக்கின்றது. மேலும் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஜிபி முத்துவுக்கும் தனலக்ஷ்மிக்கும் நடந்த பிரச்சனை மகேஸ்வரிக்கும் தனலக்ஷ்மிக்கும் இடையே நடந்த பிரச்சனை குறித்து எல்லாம் விசாரிப்பார் என தெரிய வருகின்றது.