இந்தியாவில் கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக பல்வேறு இடங்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்த கொரோனா தொற்று குறைந்ததால் தற்பொழுது கட்டுப்பாடுகள் விளக்கப்பட்டுள்ளது. இதனால் 2 வருடங்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடந்த பெரும்பாலான மக்கள் சுற்றுலா செல்ல வேண்டும் என்ற ஆவலில் இருப்பார்கள். இந்நிலையில் இந்திய பாஸ்போர்ட் மூலமாக விசா இல்லாமல் சுற்றுலாவுக்கு செல்லக்கூடிய 5 தீவுகள் பற்றி பார்க்கலாம்.
பார்படாஸ்: இது ஒரு பிரிட்டிஷ் சுதந்திர காமன்வெல்த் நாடு ஆகும். இந்த இடம் அட்லாண்டிக் பெருங்கடலால் சூழப்பட்ட கரீபியன் தீவாகும். இந்த இடத்தை 3 மாதங்கள் வரை விசா இல்லாமல் சுற்றி பார்க்கலாம்.
மொரிஷியஸ்: இந்தத் தீவை இந்தியர்கள் விசா இல்லாமல் 3 மாதங்கள் வரை சுற்றி பார்க்கலாம். இங்கு கடற்கரை வெள்ளை மணல், பசுமையான காடுகள், தேயிலைத் தோட்டங்கள், எரிமலைகள், தீவுகள் மற்றும் நீர் வீழ்ச்சிகள் என கண்ணுக்கு விருந்தளிக்கும் வகையில் ஏராளமான சுற்றி பார்க்க கூடிய இடங்கள் இருக்கிறது. இந்த தீவு இந்திய பெருங்கடலால் சூழப்பட்டுள்ளது.
ஃபிஜி: இது ஒரு தென் பசிபிக் தீவு நாடாகும். இதில் 300-க்கும் மேற்பட்ட தீவுக்கூட்டங்கள் இருக்கிறது. இங்கு ஷாகி எரிமலைத் திட்டுகள், பவளப்பாறைகள், அடர்ந்த காடுகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் என ஏராளமான சுற்றிப் பார்க்க கூடிய இடங்கள் இருக்கிறது.
குக் தீவுகள்: இது தென் பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ளது. இங்கு 15 தீவுக்கூட்டங்கள் இருக்கிறது. இந்த தீவை விசா இல்லாமல் ஒரு மாதம் வரை சுற்றி பார்க்கலாம். இந்த தீவில் நீலநிற கடல், வெள்ளை மணல் பார்ப்பதற்கு அழகான நிறைய இடங்கள் இருக்கிறது. மேலும் இந்த தீவில் சாகச விளையாட்டுகளான ஷார்பிங், டைவிங், ஸாநோர்கெளிங் போன்றவற்றை விளையாடலாம்.
இந்தோனேஷியா: இது 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீவுகளை உள்ளடக்கிய தென்கிழக்கு ஆசிய நாடாகும். இந்த இடத்திற்கு தேனிலவுக்காக பெரும்பாலானோர் செல்வார்கள். இந்த இடத்தை ஒரு மாதம் வரை விசா இல்லாமல் சுற்றிப் பார்க்கலாம்.