Categories
உலக செய்திகள் சற்றுமுன்

விசித்திரமா இருக்கு…! ”திடீரென மாறிய முடிவுகள்” புலம்பும் அதிபர் ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் விசித்தரமாக இருக்கின்றது என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் காலை முதல் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. அதிபர் வேட்பாளர்களான ஜோ பைடன் , டிரம்ப் இடையே கடுமையான போட்டி நிலவி வருகின்றது. தற்போது வரை முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் ஜோ பைடனே முன்னிலை வகிக்கின்றார். ஜோ பைடன் 238 தேர்தல் சபை வாக்குகளையும், டிரம்ப் 213 தேர்தல் சபை வாக்குகளையும் பெற்றுள்ளனர். 270 தேர்தல் சபை வாக்குகளை பெறுபவர் அமெரிக்க புதிய அதிபராக அறிவிக்கப்படுவார்.

மதியத்தில் இருந்து தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருவதால் முடிவுகள் வர தாமதம் ஆகியுள்ளது. பென்சில்வேனியா, விஸ்கான்சின், மிச்சிகன் இந்த 3 மாகாணங்களில் மட்டும் 46தேர்தல் சபை வாக்குகள் உள்ளன. இந்த மூன்று மாகாணங்களிலுமே தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கின்றன. இந்த மூன்று மாகாணத்திலும் டிரம்ப் முன்னிலை வகுத்தாலும் தபால் வாக்கு எண்ணிக்கையில் ஜோ பைடன் முந்துவார் என தகவல் வந்தன.

அதே நேரத்தில் டிரம்ப் வெற்றி பெறவும், தோல்வி அடையவும் வாய்ப்பு இருப்பதால் வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடந்துள்ளது எனவே நீதிமன்றத்தை நாடுவேன் என டிரம்ப் அறிவித்தார். இந்த நிலையில் டிரம்ப் எதிர்பார்த்தது படியே தபால் வாக்குகள் ஜோ பைடனுக்கு கைகொடுத்துள்ளது. இதனால் டிரம்ப் தோல்வி அடைவது உறுதியாகியுள்ளது.

தற்போது வரை ஜோ பைடன் வெற்றி பெற்றது, முன்னிலையை சேர்த்தால் அவருக்கு தேவையான 270 தேர்தல் சபை வாக்குகள் வந்து விடுகின்றன. இதனால் ஜோ பைடன் அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வாக வாய்ப்புள்ளது. இந்நிலையில் அதிபர் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் மிகவும் விசித்திரமாக உள்ளன.பல முக்கிய மாநிலங்களில் நேற்றிரவு நான் முன்னிலையில் தான் இருந்தேன்.தீடிரென சில வாக்குச்சீட்டுக்கள் எண்ணத் தொடங்கியதால் முடிவுகள் மாறத் தொடங்கின என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |