கட்சிக்கு விசுவாசமாக இருந்தால் எளிதில் பதவி கிடைக்காது என திமுக எம்பி ஆர்.எஸ் பாரதி தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார். உழைத்தவர்களுக்கு சீட் கிடைக்கவில்லை. உழைக்காதவர்கள் பதவியில் உட்கார்ந்துள்ளனர். கட்சிக்காக அரும்பாடு பட்ட தனக்கு 60 வயது கடந்தவுடன்தான் எம்.பி பதவியே வழங்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில்
இதற்கு பதிலடி கொடுத்துள்ள முதல்வர் ஸ்டாலின், பதவி வரும் போகும், கழகமே நம் அடையாளம், உழைப்பவர்களுக்கு கட்சியின் உரிய வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். இது மறைமுகமாக உழைக்கவில்லை என்றால் பதவி கிடையாது என்ற எச்சரிக்கையாகும். இதனால் விரைவில் ஆர் எஸ் பாரதி கட்சியிலிருந்து நீக்கப்படுவாரா என தற்போது கேள்வி எழுந்துள்ளது.