சேலம் மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கால் விசைத்தறி தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் பாதிப்படைந்துள்ளனர்.
சேலம் மாவட்டத்திலுள்ள பொன்னம்மாபேட்டை, கிச்சிப்பாளையம், குகை, கொண்டலாம்பட்டி மற்றும் வனவாசி உட்பட மாவட்டம் முழுவதும் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றனர். அந்த விசைத்தறி கூடத்தில் பட்டு வேட்டி, காட்டன் சேலை, துண்டு உற்பத்தி செய்யப்பட்டு மராட்டியம், மத்திய பிரதேசம், குஜராத் போன்ற பல்வேறு வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் கொரோனா தொற்று கட்டுபடுத்தும் வகையில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் நாளொன்றுக்கு விசைத்தறி கூடத்தில் இடண்டு ஷிப்டு செயல்படுவது குறைந்து பகல் நேர ஷிப்டு மட்டுமே இயக்கபடுகிறது. இதனால் நாள் ஒன்றுக்கு 12 லட்சம் மீட்டர் துணிகள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் விசைத்தறி தொழிலாளர்கள் வேலைவாய்ப்பினை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.