Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

விசைப்படகில் சீன இன்ஜின் பொருத்துவதற்கு நாட்டுப்படகு மீனவர்கள் எதிர்ப்பு…. விளம்பரப் பலகை வைத்து வலியுறுத்தல்….!!!!

ராமேஸ்வரம் மண்டபம் பகுதியில் விசைப்படகுகளில் சீன எஞ்சின் பொருத்தப்பட்டு இருப்பதால் நடவடிக்கை எடுக்குமாறு நாட்டுப்படகு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரத்தில் மீன்பிடித் தொழில் தான் பிரதான தொழிலாக இருந்து வருகின்றது. இங்கே நாட்டுப்படகு, விசைப்படகு, பைபர் படகு உள்ளிட்டவை பாம்பன் பகுதியில் இயங்கி வருகின்றது. இந்நிலையில் விசைப்படகில் அதிக குதிரை திறன் கொண்ட சீன இன்ஜின்களை பொருத்த நடவடிக்கை எடுத்து வருவதால் அவற்றை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு மீன்வளத் துறை அதிகாரிகளுக்கு நாட்டுப்படகு மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். 10 விசைப்படகுகளில் சீன இன்ஜின் பொருத்தப்பட்டுள்ள.து அந்த சீன எஞ்சின்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி நாட்டுப்படகு மீனவர்கள் பாம்பன் பேருந்து நிறுத்தம் அருகே விளம்பர பலகை ஒன்றை வைத்து மீன்வளத் துறை அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார்கள்.

Categories

Tech |