Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா பேட்டி

“விஜயகாந்தின் போட்டோவை பார்த்து கதறி அழுத பிரபல நடிகர்”… உருக்கத்துடன் பேட்டி…!!!

ராதாரவி, விஜயகாந்தின் அண்மையில் வெளியான புகைப்படத்தை பார்த்து கண்கலங்கி உள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்தவர் விஜயகாந்த். தன் நடிப்பால் ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர். 40 ஆண்டுகளாக சினிமா துறையில் கொடிகட்டி பறந்தார். பிறகு இவர் அரசியலில் ஈடுபட்டார். இவருக்கு கடந்த இரண்டு வருடங்களாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்து வருகிறது. இந்நிலையில் இவரின் அண்மையில் எடுத்த புகைப்படம் ஒன்று வெளியாகி அனைவரையும் கவலையில் உருக்கியது. இந்நிலையில் விஜயகாந்தின் நண்பர் மற்றும் நடிகரான ராதாரவி யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த போது விஜயகாந்தின் புகைப்படத்தை பார்த்து கண்ணீர் மல்க பேசியுள்ளார். அவருக்கு இப்படி ஒரு நிலைமை வரக்கூடாது.

விஜயகாந்தின் கண்ணுபடபோகுதய்யா திரைப்படத்தை ஒரு கட்டத்திற்கு மேல் என்னால் பார்க்க முடியவில்லை, அழுகை தான் வருகிறது. விஜயகாந்தின் நெருங்கிய நண்பரான என்னால் அவரின் புகைப்படத்தை பார்த்து அடையாளம் கண்டு பிடிக்கவே முடியவில்லை. அவரை பார்க்க வேண்டும் என்பதற்காக சதீஷ்க்கு கால் பண்ணேன். ஆனால் அவர் எடுக்கவே இல்லை. பிறகு விஜய் பிரபாகரனிடம் பேசினேன். அவரிடம் கேட்டதற்கு அம்மாவிடம் கேட்டு விட்டு செல்வதாக கூறினார். அதன் பிறகு அவர் பேசவில்லை. முதல்வர் கூட அவரை பார்க்கின்றனர். ஆனால் நெருங்கிய நண்பரான என்னால் பார்க்க முடியவில்லை. அந்த புகைப்படத்தை பார்த்ததிலிருந்து எனக்கு மனசே சரியில்லை. அவரை நேரில் சந்திக்க வேண்டும் என்று கண் கலங்கியவாறு பேசினார் ராதாரவி.

Categories

Tech |