Categories
சினிமா

விஜயகாந்தை நேரில் சந்திக்க நீங்க ரெடியா?…. வெளியானது சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்தவர் தான் நடிகர் விஜயகாந்த். இவர் நடிகராக மட்டுமல்லாமல் சிறந்த அரசியல்வாதியாகவும் திகழ்ந்தவர். ஆனால் கடந்த சில மாதங்களாகவே உடல் நலக்குறைவால் இவர் வீட்டிலேயே உள்ளார். அதிகமாக பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்வதில்லை. இதனால் அவரின் ரசிகர்கள் அவரை சந்திக்க முடியாமல் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர்.

தற்போது அவர்களுக்கு உற்சாகமூட்டும் செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது விஜயகாந்தை புத்தாண்டு தினத்தில் தொண்டர்கள் சந்திக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 1ஆம் தேதி காலை 11 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை அவரை நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அவரின் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |