Categories
அரசியல் மாநில செய்திகள்

விஜயகாந்தை முழுமையாக கொண்டு வர முடியாது… பரபரப்பு தகவல்…!!!

உடல் ரீதியாக விஜயகாந்தை இனி முழுமையாக கொண்டு வர முடியாது என அவரது மகன் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளன. அதுமட்டுமன்றி கூட்டணிகள் குறித்த குழப்பம் நிலவி வருகிறது. மேலும் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் நேற்று ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களம் இறங்கியுள்ளன. மேலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால், தேர்தல் நடத்துவதற்கான அனைத்து பணிகளும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன.

இதனையடுத்து தொகுதி பங்கீடு குறித்து இன்று அதிமுகவுடன் தேமுதிக ஆலோசிக்க இருந்த நிலையில் உரிய முக்கியத்துவம் தரவில்லை என்று தேமுதிக அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பாமகவுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தங்களுக்கு தரவில்லை என அமைச்சர் தங்கமணி உடனான கூட்டணி பேச்சுவார்த்தையை தவிர்த்துவிட்டு தேமுதிக நிர்வாகிகள் திரும்பிச் சென்றனர்.

இந்நிலையில் உடல் ரீதியாக விஜயகாந்தை இனி முழுமையாகக் கொண்டு வர முடியாது என்று அவரது மகன் விஜய பிரபாகரன் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார். மேலும் தலையே போனாலும் தேமுதிகவை தலைகுனிய விடமாட்டோம். நினைத்தால் 234 தொகுதிகளிலும் தனித்து நின்று வெற்றி பெறுவோம் எனவும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் மக்கள் நீதி மைய கட்சியுடன் தேமுதிக கூட்டணி அமைப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

Categories

Tech |