Categories
மாநில செய்திகள்

விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது…. தேமுதிக அறிக்கை….!!!!

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் நேற்று இரவு வழக்கம் போல சாப்பிட்டுவிட்டு படுக்க சென்றுள்ளார். இதையடுத்து 2 மணி அளவில் இருந்து அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அவருக்கு மூச்சு திணறலும் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை 3:15 மணி அளவில் நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் கொண்டுபோய் அனுமதித்துள்ளனர். தற்போது அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் விஜயகாந்த் வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தேமுதிக அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் அவர் உடல்நிலை சீராக உள்ளது. சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார். கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வந்துள்ளது. வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |