Categories
மாநில செய்திகள்

விஜயகாந்த் உடல்நிலை….. பிரேமலதா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…..!!!!

நீண்ட காலமாக உடல்நல குறைபாட்டால் அவதிப்பட்டு வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் நிலையில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நல குறைபாடு காரணமாக தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வருகிறார். அண்மையில் அவருக்கு நீரழிவு நோய் பாதிப்பு ஏற்பட்டது. அப்போது விஜயகாந்துக்கு வலது காலில் உள்ள மூன்று விரல்கள் அகற்றப்பட்டது. இதையடுத்து உடல்நிலை சீரானதால் விஜயகாந்த் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பி ஓய்வு எடுத்து வந்தார்.

இந்நிலையில் விஜயகாந்த் உடல்நிலையில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். அவரை அவ்வப்போது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். ஊடகங்கள் இதனை பெரிது படுத்த வேண்டாம் என்றும் கூறியுள்ளார் .அவர் விரைவில் பழைய நிலைமைக்கு திரும்புவார் என்கின்ற நம்பிக்கை உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |