தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை முடிந்து விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மியாட் மருத்துவமனை நிர்வாகம் தற்போது தெரிவித்துள்ளது.
தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த் அவர்கள் கோரோனா தொற்றின் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரைத் தொடர்ந்து அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் அவர்களும் தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருவரும் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பினர். இந்நிலையில் விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
எனவே விஜயகாந்தின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகளை ஊடகங்கள் பரப்பின. இதனை மறுத்த தேமுதிக தலைமையிடம் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் விஜயகாந்த் அவர்கள் பூரண நலமுடன் உள்ளார் எனவும் தெரிவித்தது. இதற்கிடையில் சற்று முன் மியாட் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் விஜயகாந்த் அவர்கள் சிகிச்சை முடிந்து விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் விஜயகாந்த் அவர்கள் கோரோனா தொற்றிலிருந்து விடுபட்டு விட்டார் எனவும் பரிசோதனைக்காகவே மருத்துவமனை கொண்டுவரப்பட்டார் எனவும் தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது எனவும் அறிவித்தது.