Categories
மாநில செய்திகள்

‘விஜயதசமி’ அன்று கோவிலை திறக்க வேண்டும்… உயர் நீதிமன்றத்தில் மனு!!

வரும் வெள்ளிக்கிழமை விஜயதசமி அன்று கோவிலை திறக்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் தமிழகத்தில் விதிக்கப்பட்டுள்ளது. அதில், குறிப்பாக கோவில்களை வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.. இதற்கிடையே இந்த 3 நாட்களும் அரசு திறக்க வேண்டும் என்று தமிழக பாஜக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.. மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி இந்த மூன்று நாள் கோவில்கள் திறக்கப்படவில்லை என்று தமிழக அரசு விளக்கமளித்துள்ளது..

இந்தநிலையில் வரும் வெள்ளிக்கிழமை விஜயதசமி அன்று கோவிலை திறக்க வேண்டும் எனக் கோரி உயர் நீதிமன்றத்தில் கோவையை சேர்ந்த பொன்னுச்சாமி என்பவர் அவசர மனு தாக்கல் செய்துள்ளார். இதுகுறித்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது..

 

Categories

Tech |