தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எஸ்.ஏ சேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இவர் தற்போது தமிழ்த் திரைப்படத்துறையில் முதன்மை நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார். விஜயின் ரசிகர்கள் அவரை “இளையதளபதி” என்று அழைக்கிறார்கள். இதுவரை இவர் 64 படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் விஜய்யின் தளபதி 66 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அவருடைய பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை மதியம் 12 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரது 65வது படத்திற்கு ‘பீஸ்ட்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடபட்டுள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.