தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். பீஸ்ட் படத்தின் வெற்றியே தொடர்ந்து தோழா உள்ளிட்ட படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தானா நடித்து வருகிறார். இப்படத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷாம், ஸ்ரீகாந்த், ஜெயசுதா, சங்கீதா, சம்யுக்தா பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் இறுதிக்கள் இதன் முழு படப்பிடிப்பு முடிவடைந்து விடும் என்று கூறப்படுகிறது. மேலும் படத்தின் முதல் சிங்கிள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வாரிசு படப்பிடிப்பில் விஜயுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் நடிகை ராஷ்மிகா தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையதளத்தில் லைக்குகளை குவித்து வருகிறது.