தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் தளபதி விஜய். தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் அரபிப் குத்துப் பாடல் வெளியாகி செம வைரலானது. இதனிடையே தெலுங்கு இயக்குனரான வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிக்கும் தளபதி 66 படத்தில் விஜய் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு முன் வெற்றிமாறனும் விஜய்யும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் புதிய தகவல் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, “நடிகர் விஜய்யும் இயக்குனர் வெற்றிமாறனும் தனித்தனியாக அவர்களது வேலைகளில் பிஸியாக உள்ள நிலையில் இருவரின் நேரமும் ஒத்துப் போனால் கண்டிப்பாக விரைவில் இப்படம் தொடங்கப்படும். மேலும் எல்லாத்துக்கும் டைமிங் தான் முக்கியம்” என்று கூறியுள்ளார். இந்த நிலையில் இவ்விருவரும் தங்களின் பணிகளை முடித்துவிட்டு விரைவில் இணைவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.