Categories
சினிமா

“விஜயை நான் பாராட்டவே மாட்டேன்”….. எஸ் .ஏ. சந்திரசேகர் பேட்டி…..!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். பீஸ்ட் படத்தின் வெற்றியே தொடர்ந்து தோழா உள்ளிட்ட படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தானா நடித்து வருகிறார். இப்படத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷாம், ஸ்ரீகாந்த், ஜெயசுதா, சங்கீதா, சம்யுக்தா பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர் வெளியான நிலையில், தீபாவளி முன்னிட்டு படத்தின் முதல் பாடல் வெளியாக உள்ளது. இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

அதனைத் தொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர் இந்த அளவிற்கு உச்ச நட்சத்திரமாக உயர்வதற்கு அவரின் தந்தையும் பிரபல இயக்குனர் எஸ்.ஏ.சேகர் தான் காரணம். விஜய் சினிமாவில் அறிமுகப்படுத்திய அவரை ஒரு ஹீரோவாக ரசிகர் மத்தியில் நிலை நிறுத்தியவர் சந்திரசேகர். இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் சந்திரசேகர் விஜய் பற்றி பேசி உள்ளார். அப்போது பேசிய அவர், நான் பொதுவாக யாரையும் அவ்வளவாக பாராட்ட மாட்டேன். ஆனால் அவர்கள் செய்த தவறுகளை சுட்டி கொண்டே இருப்பேன். விஜய் இதுவரை 65 படங்களில் நடித்துள்ளார். ஆனால் அவரை நான் பாராட்டியதே இல்லை. இதனால் அவர் சில சமயங்களில் கோபப்பட்டு ஷோபாவிடம் குறை கூறுவார். அதன்பிறகு ஷோபா என்னை அதற்காக திட்டுவார் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |