நடிகர் விஜயை பற்றி சொல்வதற்கு ஒரு சொல் எல்லாம் பத்தாது என்று நடிகை பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார்..
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய்.. இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.. இவரது நடிப்பில் பீஸ்ட் படம் உருவாகி வருகிறது.. நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார்.. மேலும் இந்த படத்தில் யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது..
இந்தநிலையில் “பீஸ்ட்” பட நாயகி பூஜா ஹெக்டே தனது ட்விட்டர் பக்கத்தில், #AskPoojaHegde என்ற ஹேஸ்டேக் மூலம் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த கேள்விகளை கேட்கலாம் என்றார்.. இதையடுத்து ரசிகர் ஒருவர் தளபதி விஜய் சார் குறித்து ஒரு சொல்லில் சொல்லுங்கள் என்றார்.. இதற்கு பதிலளித்த பூஜா ஹெக்டே, ஒரு சொல் எல்லாம் பத்தாது.. ஆனால் …. நான் முயற்சி செய்கிறேன் … ம்ம்ம் … அவர் இனிமையானவர் என்று பதிலளித்தார்..
One word is not enough..but….I’ll try…ummm… SWEETEST. #AskPoojaHegde https://t.co/qBDXfsO9pG
— Pooja Hegde (@hegdepooja) October 18, 2021