பிரபல தயாரிப்பாளர் விஜய்யை புகழ்ந்து பேசியுள்ளார்.
தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் விஜய். இவர் தனது நடிப்பின் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களை தன் வசம் கவர்ந்துள்ளார். இவர் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக வலம் வருகின்றார். விஜய் நடிப்பு, ஆக்ஷன், நகைச்சுவை, சென்டிமென்ட், நடனம் என தனக்குள் பல திறமைகளை வைத்துள்ளார்.
இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் விஜய்யை புகழ்ந்து கூறியுள்ளதாவது, விஜய்க்கு உழைப்பு மேல் நம்பிக்கை உள்ளது. அவர் படம் நன்றாக இல்லாவிட்டாலும் மக்கள் ரசிக்கிறார்கள். எம்ஜிஆரை போலவே விஜய்க்கும் எல்லா பாடல்களும் ஹிட் ஆகும் ராசி இருக்கின்றது. விஜய்க்கு ஆஸ்காருக்கு போகக் கூடிய அளவுக்கு திறமை இருக்கின்றது. ஆனால் அதில் ஒரு சிக்கல் இருக்கின்றது. ஒரே ஒரு வெளிநாட்டு படத்துக்கு மட்டும்தான் ஆஸ்கார் விருது தருவார்கள். விஜய்க்கு ஆஸ்கர் கிடைத்தால் தமிழ் சினிமாவுக்கே பெருமை தான்” என புகழ்ந்து பேசியுள்ளார். இச்செய்தி அறிந்த ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.