தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய்க்கு தெலுங்கு திரையுலகின் நடிகரான மகேஷ் பாபு சமூக வலைத் தளங்களின் வாயிலாக சவால் விடுத்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் ஒருவருக்கு ஒருவர் சவால்கள் விடுத்து வருவது பிரபலமாகி வருகிறது . அந்த வகையில் தற்போது இந்தியாவிலும் திரையுலக பிரபலங்கள் அரசியல்வாதிகள் மரம் நடுவதை சவாலாக விடுத்து வருகின்றனர்.தெலங்கானா எம்.பி சந்தோஷ் குமார் ‘கிரீன் இந்தியா சேலஞ்ச்’ என்ற மரம் நடும் சேலஞ்ச் ஒன்றை உலக சுற்றுச் சூழல் தினத்தன்று தொடங்கி வைத்தார்.
தெலுங்கு திரையுலக பிரபலங்களான பிரபாஸ், நாகர்ஜுனா, சமந்தா, ராஷ்மிகா மந்தனா, ராஷி கண்ணா ஆகியோர் இந்த சவாலை செய்துள்ளனர் .இந்நிலையில் நேற்று பிறந்த நாள் கொண்டாடிய மகேஷ்பாபு அவர்கள் மரம் நடும் சவாலை செய்யுமாறு நடிகர் விஜய், நடிகை ஸ்ருதிஹாசன், ஜூனியர் என்டிஆர் ஆகியோரை கேட்டுக்கொண்டுள்ளார். மகேஷ்பாபுவின் சவாலை ஏற்பாரா என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து வருகின்றனர்.