விஜய்க்கு போட்டியாக லெஜண்ட் சரவணன் கலமிறங்கியுள்ளார்.
பிரபல தொழிலதிபராக இருந்து வந்த தி லெஜெண்ட் சரவணா தமிழ் சினிமா உலகிற்கு தி லெஜண்ட் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். அவரின் தி லெஜெண்ட் திரைப்படம் பல விமர்சனங்களுக்கு உள்ளானாலும் அடுத்த திரைப்படத்திற்கு ரெடியாகி வருகின்றார். இந்த நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா வாரிசு திரைப்படத்தின் சூட்டிலிருந்து விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டிருந்தார்.
இந்த புகைப்படம் மிகவும் வைரலானதை தொடர்ந்து தற்பொழுது லெஜெண்ட் சரவணன் தனது போட்டோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் விஜயை போல முன்னால் மூன்று முடியை தொங்கிவிட்டு போஸ் கொடுத்திருக்கின்றார். மேலும் இந்த புகைப்படம் லெஜெண்ட் படப்பிடிப்பின்போது எடுத்தது எனவும் குறிப்பிட்டு இருக்கின்றார்.