Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள “காத்துவாக்குல ரெண்டு காதல்”…. வெளியான படத்தின் ட்ரைலர்…!!!!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

இயக்குனர் விக்னேஷ் சிவன் தற்போது விஜய் சேதுபதியை வைத்து காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தை செவென் ஸ்கீரின் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் லலித் குமார் மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து தயாரிக்கிறார்கள். இந்தப் படத்தில் நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட இருவரும் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது.

இந்த படம் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகியிருக்கின்றது. இந்த நிலையில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. டிரெய்லரில் விஜய் சேதுபதி சமந்தா மற்றும் நயன்தாராவிடம் மாட்டித் தவிக்கும் ரெமோவாக கலக்கியிருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் “கொடுத்து வச்ச மனுஷன்” என விஜய் சேதுபதியை கிண்டலடித்து வருகின்றனர் குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |