Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான “கடைசி விவசாயி”…. தரவரிசை பட்டியலில் இரண்டாம் இடம்…. வேற லெவல் பா…!!!!

திரைப்படங்களின் தரவரிசை பட்டியலில் விஜய் சேதுபதியின் கடைசி விவசாயி திரைப்படம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

“காக்கா முட்டை”, “குற்றமே தண்டனை”, “ஆண்டவன் கட்டளை” முதலான படங்களை இயக்கிய இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் வெளி வந்த திரைப்படம் “கடைசி விவசாயி”. இத்திரைப்படம் விவசாயத்தினை மையமாகக்கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் நல்லாண்டி என்பவர் முன்னணி வேடத்திலும் விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்டோர் இணைந்து முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் உலக அளவில் திரைப்படங்களை தரவரிசைப்படுத்தி அதன் மதிப்பை வெளியிட்டு வரும் லெட்டர்பாக்ஸ்டி நிறுவனம் 2022 ஆம் வருடத்திற்கான முதல் ஆறு மாதங்களில் வெளியான படங்களின் தரவரிசைப்படுத்தி இருக்கிறது. இதில் மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான கடைசி விவசாயி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இந்த திரைப்பட தரவரிசை பட்டியலில் ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் ஆறாவது இடத்தையும் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் பதினொன்றாவது இடத்தையும் பிடித்திருக்கின்றது குறிப்பிடத்தக்கது.

 

 

Categories

Tech |